பிரபாகரன் வாழ்க்கை படமாகிறது

இலங்கையில் தனி ஈழம் அமைய போராடி உலக தமிழர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 2009-ல் நடந்த இறுதிப்போரில் அவர் மரணம் அடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில் பிரபாகரன் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது.

இந்த படத்தை வெங்கடேஷ் குமார் டைரக்டு செய்கிறார். உனக்குள் நான், லைட்மேன், நீலம் படங்களை எடுத்த ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பிரபாகரனின் விடுதலை போராட்டம், சிங்கள ராணுவத்தின் இன அழிப்பு யுத்தம் போன்றவை இதில் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே பலர் பிரபாகரன் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்தனர். குப்பி, சந்தன கடத்தல் வீரப்பன் படங்களை எடுத்த ஏ.எம்.ஆர்.ரமேசும் பிரபாகரன் வாழ்க்கையை படமாக்குவதாக கூறினார். ஆனால் பட வேலைகள் எதுவும் தொடங்கப்படாததால் தற்போது ஸ்டுடியோ 18 பட நிறுவனம் அவரது வாழ்க்கையை படமாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

-dailythanthi.com