சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர், தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பினாலும், தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி’, ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.
‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர் குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது தம் உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டு வந்தார். ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு.? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
கனடாவில் சென்று முழங்கிய போது அந்நாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத் துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார்.”இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தன் இனத்திற்கென ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்! என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.
“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!” என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து, நாளும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் இதேபோல படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்….? என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் , சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழ்ப்புலியாய் சீறினார். விளைவு..? மீண்டும் ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’. 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு, நீதிபதிகளாலே ‘சீமான் பேசியதில் தவறில்லை’ என இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு , வெளியே வந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு கட்சி நின்ற 63 தொகுதிகளிலும் தம் இனத்தை அழித்த காங்கிரசை எதிர்த்து பரப்புரை செய்தார்.பரப்புரைகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோதும், வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டும், பரப்புரையின் போதும் உண்டியல் ஏந்தியும் பரப்புரை மேற்கொண்டார்கள், சீமானும், அவரது தம்பிகளும். இறுதியில், தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசு வெற்றி(?) பெற முடிந்தது. காங்கிரசு வெற்றி பெற்ற தொகுதிகள், சீமான் பரப்புரைக்கு போக முடியாத தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசு தமிழகத்திலே மண்ணை கவ்வியதால், காங்கிரசுக்கு தலைவலியாகவுள்ள சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென, சிலர், காசு கொடுத்து சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும் அளிக்க செய்தார்கள். ‘போர்க்களத்தில் குண்டுகளையும், அரசியல் களத்தில் அவதூறுகளையும் சந்திப்பது இயல்பு’ என இவைகளை உதறித்தள்ளினார் .
முல்லைப்பெரியாறு பிரச்னை, 3 தமிழர்களின் உயிர்ப்பிரச்சனை, கூடங்குளம் பிரச்னை என அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுத்து இவரும், இவரது தம்பிகளும் களமாடினார்கள். இவர் பேசுகிற கூட்டங்களில், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடிய போதும், ‘இது எனக்கு கூடுகிற கூட்டமல்ல.! என் அண்ணன் பிரபாகரனுக்கு கூடுகிற கூட்டம்’ என்று முழங்கினார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினாலும், இவரை ஊடகங்கள், பெரிதாக காண்பிப்பது இல்லை.கட்சியில் பல கட்டுப்பாடுகள் விதித்தார் சீமான் , அந்த கட்டுப்பாடுகள்,’என்னை தலைவன் என அழைக்கக் கூடாது. சீமான் வாழ்க! என முழக்கம் போடக்கூடாது. கட்சியில், எவருக்கும் துண்டு, மாலை போடக்கூடாது.
மது,புகையிலை பயன்படுத்தக் கூடாது. பெண்களை மதித்து போற்ற வேண்டும்’ என பல நற்கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், கட்சியில் இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, மருத்துவர் பாசறை,வழக்கறிஞர்கள் பாசறை என புரட்சிகரமாக கட்சி நடத்தினார். ‘நான் இந்தியன் அல்ல.! திராவிடன் அல்ல.! தமிழன்.!!’ என்று முழங்கியதன் விளைவாக இவருக்கு கிடைத்த பட்டங்கள், ‘இனத்துரோகி’, தேசத்துரோகி’.
இவர், பணத்தை எதிர்பார்த்திருந்தால் , இவர் திரைத்துறையிலே இருந்து , லட்சம் லட்சமாக சம்பாதித்திருக்க முடியும். இப்படி, வாடகை வீட்டிலே குடியிருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. பதவியை எதிர்பார்த்திருந்தால், எந்த கட்சியிலாவது கொள்கை பரப்பு செயலாளராக போயிருக்க முடியும். இப்படி சிறை செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்காது. இதனையெல்லாம் எதிர்பாராமல் இவர் துடிப்பது, தன் இனத்திற்கு என வலிமையான அரசியல் கட்சியை உருவாக்கத் தானே ஒழிய, தான் ஆட்சிக்கட்டிலிலே அமர அல்ல..!!
அதனால் தான் , அமெரிக்கா, கனடா, பிரான்சு என நாம் தமிழர் கட்சியை சர்வதேச அளவில் முன்னெடுத்தார். இவர் கட்சியில் விரும்புவது, இனத்திற்கும், கட்சிக்கும் உண்மையாக நிற்கிற தம்பிகளைத்தானே ஒழிய, தனக்கு கொடி பிடிக்கிற தம்பிகளை அல்ல.!
இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமும் கூட, இவரைப்பற்றி உண்மைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு தானே ஒழிய, இவரை பற்றி துதி பாடுவதற்கு அல்ல.! ஏனென்றால், தன் தம்பிகளை சீமான் அப்படி வளர்ப்பதில்லை.!!’ ஏனென்றால், இவர்
தமிழ்த்தேசிய தலைவர் ஏற்றுக்கொண்ட
தம்பி..!!
https://www.facebook.com/608726505952702/videos/631948603630492-எங்கள் ஈழம் இது தமிழீழம்/https://www.facebook.com
வாழ்க சீமான் உங்கள் முயற்ச்சி திரு வினையாகட்டும் தமிழர்கள் தலை நிமிரட்டம் வெற்றி நிச்சயம் !
வாழ்க சீமான்.
இவரின் பூர்விகம் எதுவோ?
நீங்க எந்தமாட்டு மன்னர் ? தங்கள் பூர்வீகம் ?
ஒருவேளை இப்பொழுதுள்ள வட இந்திய நிலபரப்பிலிருந்து அகதியாக தென்னிந்தியா என்று கூறபடுகிற (கேரளா ஆந்திரா கன்னடா தமிநாடு) நிலத்தில் குடியேறிய வடுக பூர்விகமா நைனா ?
திரு பாறையே, உமது புத்தி ஏன் இப்படி போகிறது. யாம் கேட்டதற்கு பதில் தெரிந்தால் கூறவும். அதைவிட்டு விட்டு மற்றவரை மட்டம் தட்டி பேசுவதை விடும். உம்மை போன்று யாம் ஒன்றும் தரம் தாழ்ந்த தமிழன் அல்ல. யாம் நல்ல தமிழர் இனம் . தமிழனும் மற்ற இனத்தை போன்றே இவ்வுலகில் வாழும் மனித குலம். உம்மின் தவறான கருத்தினால் தமிழரை அரக்கன் என்று மற்றவர் கூற வைத்து விடாதிர். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அது தமிழனாக இருந்தாலும் சரி மற்ற இனத்தவர் ஆகா இருந்தாலும் சரி. முதலில் மற்ற இனத்தாரை கேவலமாக பேசுவதை நிறுத்துவீர் . என்ன ஒரு …. குணம் அய்யா உமக்கு.
நைனாவுக்கு என்னமா ஆத்திரம் வருகிறது !!
பலநூறு வருசமாக வடுகர்களின் அடக்குமுறைகளிலும் இன அழிப்பிலும் அவதிக்குள்ளாகும் எமக்கு எம்புட்டு ஆத்திரமும் வெறியும் இருக்கும் …
தேன்தமிழில் அடுக்கு மொழிபேசி இனம்மாறாட்டம்செய்து சாதிமாறாட்டம் பண்ணி எம்குல தமிழர்களுக்குள் சாதி பிரிவினை உண்டுபண்ணி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி ஈழத்திலும் தமிழகத்திலும் இந்திய மத்திய அரசியலிலும் வடுக தமலையை ஏற்படுத்தி ஈழத்தில் எம் இனத்தை அழித்தொழித்து விட்டார்கள் ..
தொந்திவடுகன் திருமலை நாய்கேன் சூநியகாரிமவன் எம் பாண்டிய வம்சத்தையே தேடித்தேடி அழித்தான்.. ஈழத்தை சிதைத்து விட்டான் வடுகன் ..இப்பொழுது அதே தமிழின அழிப்புக்காக தமிழகத்தை களம் அமைகிறான் வடுகன் ..தமிழர்களை இந்துக்களுக்கு எதிரான இனமாக கட்டமைப்பது /இதேபோல் பல சதிகளில் வடுகன் ..
தமிழ்நாட்டை தனிநாடாக பிரிக்கவேண்டும் என்று தமிழர்களை உசுபேத்தி தமிழர்களை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு தமிழகம் மற்றும் போலிமலயாளிகலாகவும் கன்னடர்களாகவும் அந்தமண்ணில் வாழும் வடுகர்களையும் சேர்த்து அகண்ட தெலுங்கு தேசம் அமைக்க திட்டம் தீட்டுகிறார்கள் …
கூடிய சீக்கிரம் கருணாநிதி ,வைக்கோ ,விஜயராகவலு அனைவரும் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தி தமிழர்களை எதிர்ப்பார்கள் …
பல நடிகர்கள் உட்பட தமிழர் வேசம்போட்டவர்கள் பலர் தமிழர்களை நேரடியாக எதிர்ப்பார்கள் ..
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .தமிழ் வாழ வேண்டும் வளர வேணும் . தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டும் எனும் சீமானின் எண்ணங்களுக்கும் ,முயற்சிகளுக்கும் கை கொடுப்போம் .வசைபாடுவதை நிறுத்துவோம் .
எமக்கு ஆத்திரம் இல்லை தமிழனே. என் தமிழ் இனத்தில் உம்மை போன்ற வெறியர்களால் தமிழினம் தலை தாழ்ந்து நிற்க வேண்டி வருகிறதே என்ற வருத்தம் தான். ஈழம் ஈழம் என்று கூப்பாடு இடுகிரிரே, அவர்கள் ஒன்றும் நம் தமிழ் நாட்டு தமிழர்களை மதிப்பதில்லை. அது உமக்கு புரியவில்லையா? மேலும் இலங்கை அப்பாவி ஈழ தமிழர்கள் படுகொலைக்கு முக்கிய காரணம் பிரபாகரனின் பேராசையே . காமராஜரை போன்ற தமிழர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்தால் நாடும் மக்களும் செழிப்பு அடைவர். …………….உலகத்தில் ஆரம்ப காலங்களில் தோன்றிய இனங்கள் பல அழிந்து விட்டன தமிழை தவிர. எனவே உமது உள்ளத்தில் உள்ள இன வெறி தன்மையை களைந்து விடு திரு பாறையே.
ரிசி மூலம் ,நதி மூலம் எல்லாம் பார்த்துக்கொண்டு இல்லாமல் யாரால் தமழனுக்கு விடிவு பிறக்கும் என்பதுததான் இங்கு முக்கியம் சீமானின் உறுதியான நெஞ்சுரம் ,பேச்சித்திரன் தமிழன் பால் கொண்டுள்ள பற்று சீமான் அவர்களை தமிழ் தலைவன் என்ற அரியணையில் அமர வைக்கும் தமிழன் என்றப்போர்வையில் பசுத் தோல் போர்த்திய புலிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் வாழ்க சீமான் அவர்களே !!!
நிச்சயமாக தமிழகத்திலே ஒரு நல்ல மாற்றம் வர வேண்டும். கலைஞரின் ஆட்சியிலோ அம்மாவின் ஆட்சியிலோ தமிழகம் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. இவர்கள் செய்ததெல்லாம் தமிழையும் அளித்தார்கள், தமிழனையும் அழித்தார்கள். அத்தோடு நமது உரிமைகளையும் இழக்க வைத்தார்கள். இவர்கள் ஒழிய வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!
நான் உங்கள் கட்சியல் saarallamaa