கி. சீலதாஸ், செம்பருத்தி.காம் (சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 6 – இதற்கு முன்பு வெளியான பகுதிகள் இப்பகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன).
ஷியாமளாவும் டாக்டர் ஜெயகணேசனும் 1998ஆம் ஆண்டு இந்து ஆச்சாரப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 19.11.2002-இல் ஜெயகணேஷ் இஸ்லாத்தைத் தழுவினார். 25.11.2002-இல் தம் இரு பிள்ளைகளையும் இஸ்லாத்திற்கு மாற்றிவிட்டார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றிவிட்டதால் அவர்களுடைய திருமணம் முறிவு நிலையை அடைந்துவிட்டது. 18.12.2002-இல் ஷியாமளா தன் கணவரை விட்டுப் பிரிந்து செல்லும் போது தமது இரு பிள்ளைகளையும் கூடவே தன் பெற்றோரின் இல்லத்திற்குக் கொண்டு சென்றார்.
31.12.2002-இல் தம் இரு பிள்ளைகளுக்கான பாதுகாப்பு உரிமையைக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தார். இந்த வழக்கு 16.1.2003-இல் விசாரணைக்கு வந்தபோது கணேஷ் முன்னிலையாகி தமக்கு வழக்குரைஞரை நியமிக்க அவகாசம் தேவை என்று விண்ணப்பித்ததை நீதிமன்றம் அனுமதித்து விசாரணையை 25.2.2003-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜெயகணேசின் வழக்குரைஞர்களின் மீண்டுமொரு ஒத்திவைப்பு விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை 17.3.2003ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கு இடையில் 7.1.2003இல் ஜெயகணேஷ் சிலாங்கூர் ஷரியா உயர் நீதிமன்றத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு உரிமையைத் தமக்கு வழங்க வேண்டுமென்ற மனுவைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவின் நகல் 9.2.2003இல் ஷியாமளாவுக்குக் கொடுக்கப்பெற்றது. 27.3.2003ஆம் தேதி ஷியாமளா ஷரியா உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதலால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பெற்றது. 17.4.2003ஆம் தேதி ஷியாமளாவின் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கில் கூறப்பட்டத் தீர்ப்பானது சில முக்கியமான சட்டப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தது.
(1) ஜெயகணேஷ் இஸ்லாத்தைத் தழுவிய போதிலும் அவருடைய கணவன், தந்தை என்ற பொறுப்பு இன்னும் முற்றுப் பெறவில்லை.
(2) ஜெயகணேஷ் இஸ்லாத்தைத் தழுவிய போதிலும் ஷியாமளா அவரின் மனைவி என்ற அந்தஸ்தை இன்னும் இழந்துவிடவில்லை.
(3) ஜெயக்ணேசனுக்குப் பிள்ளைகளின் பாதுகாப்பு உரிமை வழங்கிய சரியா உயர் நீதிமன்றம் அந்த ஆணையை அமலாக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை, காரணம் ஷியாமளா ஒரு முஸ்லிம் அல்லாதவர்.
இவை மூன்றும் நியாயமான முடிவுகள் என்ற போதிலும் நீதிபதி கூறிய மேலும் சில கருத்துக்கள்ன் நடைமுறைக்கு ஒத்துவராத போல் இருக்கின்றன.
அதில் முக்கியமாக, இஸ்லாத்தைத் தழுவிய கணவர் மணவிலக்கு கோரி மனுதாக்கல் செய்யமுடியாது. ஆனால் இஸ்லாத்தைத் தழுவாத மனைவி மணவிலக்குக் கோரி மனுதாக்கல் செய்யலாம். அப்படி மனைவி மணவிலக்கு கோராவிட்டால் இந்து ஆச்சாரப்படி செய்து கொள்ளப்பட்ட திருமணம் நிலைத்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம் அல்லாத மனைவியும் முஸ்லிம் கணவரும் இணைந்து வாழ முடியாது என்பதை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாதது ஆச்சரியமே.
மலேசியாவைப் பொறுத்தவரையில் முஸ்லிமும் முஸ்லிம் அல்லாதாரும் இணைந்து தம்பதிகளாகக் குடும்பம் நடத்துவதை அந்தச் சமயத்தின் இலாகா வன்மையாக கண்டிக்கும், தடுக்கிறது. பல நாடுகளில், இந்தோனேஷியா உட்பட, முஸ்லிமும் முஸ்லிம் அல்லாதார் இணைந்து குடும்பம் நடத்துவதை ஒரு குற்றமாகக் கருதவில்லை என்ற போதிலும் இந்நாட்டில் அப்படிப்பட்ட நடத்தையை இஸ்லாமிய இலாகாவும், ஷரியா நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாது.
மனைவி அனுமதியின்றி மதமாற்றம் முடியுமா?
மேற் குறிப்பிடப் பெற்ற தம்பதிகளுக்கு (ஷியாமளா ஜெயகணேஷ்) இடையே மேலும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கில் தம் இரு பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு தம் அனுமதியின்றி மதமாற்றம் செய்தது சட்டப்படி செல்லாது என்று பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்று கோரினார் ஷியாமளா. இந்த வழக்கில் ஜெய்கணேஷ் ஒரு ஆட்சேபணையை முன் வைத்தார். அதாவது 121(1A)சரத்தின்படி உயர் நிதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது, சஷிரியா நீதிமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்றார்.
இந்த ஆட்சேபணையை ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இந்த முடிவுக்கான காரணத்தைத் தந்த நீதிபதி 121(1A) சரத்து மதச்சார்பற்ற உயர் நீதிமன்றத்தின் ஷரியா நிதிமன்றங்களுக்கு உட்பட்ட விசயங்களில் தலையிட அதிகாரம் இல்லை என்ற காரணத்தைக் காட்டியது. எனவே, அந்த இரு பிள்ளைகளும் முறையாக இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டார்களா என்பதை விசாரிக்கும் அதிகாரமும், ஆற்றலும் ஷரியா நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றார்.
மேலும், இஸ்லாத்தைச் சார்ந்த கணவர் தன்னிச்சையாக இரு பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யலாம். அவருடைய மனைவியின் அனுமதி தேவை இல்லை என்றும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஷியாமளா ஷரியா நீதிமன்றத்திற்குப் போக முடியாது என்பதை ஒப்புக்கொண்டதோடு, கூட்டரசு வட்டார இஸ்லாமிய மன்றத்தின் துணையை நாடும்படி ஆலோசனை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றம் கை கழுவியது
முஸ்லிம் அல்லாத பெற்றோரின் பரிதாபமான நிலைக்கு உயர் நீதிமன்றங்கள் எந்தப் பரிகாரமும் வழங்க முற்படவில்லை என்பதோடு சில நீதிபதிகளும் முன்னாள் மலாயா தலைமை நீதிபதி உட்பட இந்தப் பிரச்சினைக்குப் நாடாளுமன்றம்தான் தீர்வு காண வேண்டுமென கருத்து தெரிவித்தனர். இந்த நிலை முஸ்லிம் அல்லாதாருக்கு ஒரு சட்ட நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களைத் தீராத துயரத்தில் ஆழ்த்திவிட்டிருப்பதை எல்லோரும் உணர்ந்த உண்மையாகும்.
சமீபத்தில் ஒரு அம்மையார் (ஞோஞ்யா – nonya) தமது அடையாளக் கார்டில் இஸ்லாத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தது. அவர் இறந்ததும் இஸ்லாமிய இலாகா ஷரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இறந்த அந்த அம்மையாரின் உண்மையான மதம் என்ன என்பதை உறுதிப்படுத்தும்படி வேண்டியது. ஷரியா நீதிமன்றம்
அப்துல்லா படாவியின் கருத்து
அந்த அம்மையார் முஸ்லிம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அந்த அம்மையாரின் பிள்ளைகளின் சாட்சியத்தை வைத்து முஸ்லிம் அல்லாதார் ஷரியா மன்றத்துக்குப் போகலாம் என்று பரவலாகச் சொல்லப்பட்டது. முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா படாவியும் (இப்போது துன் அப்துல்லா படாவி) இந்தக் கருத்தை வெளியிட்டார். இது ஆறுதல் தருவதாக இருப்பினும் பெரும் மகிழ்வுக்கு உரிய செய்தியாக கருத முடியாது.
முஸ்லிம் அல்லாதார் ஷரியா நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கவேண்டுமானால் சத்திய பிரமாணம் செய்ய வேண்டும். கிறிஸ்தவர்கள் விவிலியத்தின் (Bible) மீது சத்தியம் செய்யலாம். இந்துக்கள் பகவத் கீதயைப் பயன்படுத்தலாம். இந்த சமய நூல்களை ஷரியா நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. இது சிந்திக்க வேண்டிய விசயம்.
– தொடரும்..
பகுதி 1 ; பகுதி 2 ; பகுதி 3 ; பகுதி 4 ; பகுதி 5
ஆண்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால், நம் இன சகோதரிகளுக்கு சாந்தி, நிம்மதி …!
முஸ்லிம் அல்லாதவர்கள் சரியா நீதி மன்றத்துக்கு செல்வது பயனற்றது. காரணம், அங்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு தலை பட்சமான சட்டங்களே உள்ளன. அப்பனுக்கு என்ன உரிமை உண்டோ அதே உரிமை தாயிக்கும் உண்டு என்று சொல்ல மெத்த படித்த மேதையாக இருக்க வேண்டியது இல்லை. அக்குழந்தைகள் 18 வதை அடையும் வரை பிறந்த மதத்தில் இருப்பதே நாயமானதாகும்.
ஷாரியா நீதிமன்றம் விதண்டா வாதத்தில் ஈடும்படு போது பிடச்சனைகள் தீர்வது கடினம்.ஆனால் எல்லாக் காலங்களிலும் மக்களை ஏமாற்ற முடியாது. நீதி நிலைத்து நிற்கும்!
மலேசியாவில் மட்டும்தான் மத வெறியர்கள் இருக்கிறார்கள்.மனிதனை அவன் விருப்பப்படி வாழவிடவேண்டும்.கட்டாயப்படுத்தி மதத்தில் சேர்ப்பதென்பது மடமைத்தனம்.
மதம் எனபது தன் சுய விருப்பதின் பேரில் தேர்ந்து எடுக்கப்பட்டதாக இருப்பது முக்கியம்.அதை விடுத்து மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் அல்லது சில உபாயம் காரணமாக சேர்வது,சேர்ப்பது சார்ந்த மதத்திற்கு இழுக்கை உண்டாக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் சிறியவர்கள் தங்கள் தாய்,தந்தை இருவரின் ஒப்புதலுடன் மதம் மாற்றுவது மிக முக்கியம்.இன் நாட்டில் சில மதங்கள் உறுபினர்களை சேர்ப்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ளனர்.அதனால் மதத்தின் மீது முக்கியத்துவம் குறைந்து பல பிரச்சனைகள் உண்டாகின்றன.
நாம் தினமும் குளிக்கும்பொழுது கூட நாம் வைத்தி ருக்கும் பாத்திரத்தில் உள்ள நீர் மீது நம்முடைய உள்ளங்கையை வைத்து,
கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலைஸ்மின் சந்நிதிங் குரு
என்று 11 முறை ஜெபித்து குளித்தோமானால், நம் குழாய்த் தண்ணீர் கூட கங்கையை போல் புனித நீராக மாறி, நமக்கு பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும்.
நற்சிந்தனை உள்ளவர்களுக்கு, அவர்கள் வீட்டுத் தண்ணீரும் தீர்த்தமாக பலன் தரும். அதே போல தான் மதமும் . உணராதவரை அதன் அருமை தெரியாது .
உலகத்தில் உள்ள எல்லா இஸ்லாமிய சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு சட்டத்தை இங்கு அமல் படுத்தி இதையே உலகின் சிறந்த இஸ்லாமிய சட்டம் என சொல்லும் அம்னோ முட்டாள் சமய தீவிரவாதிகள்.
இதற்கெல்லாம் யார் காரணம் MIC மானங்கெட்ட நம் இனத்ரோகிகள் தான். எந்நாளும் நமக்கு நியாயம் கிடைக்காது. ஜெயகணேஷ் போன்ற ………….. இருக்கும்வரை நம்மினம் இந்நிலையிலேயே இருக்க வேண்டியதுதான்…என்னத்தை மதம் மாறினாலும் இவன்கள் கிலிங்க்தான்…மானங்கெட்ட ஜென்மங்கள்!
ஒருகாலகட்டத்தில் மலேசியாவில் மதிர்ப்புக்குரிய நீதிபதிகள் இருந்தனர். ஆனால் என்று காகாதிர் பதவி ஏற்றானோ அன்றே அதன் நியாயம் அதோகதி யானது . அதிலும் நம்மவர்கள் தலை மண்ணில் புதையுண்டிருந்தால் எப்படி விடிவு பிறக்கும்?
மங்கை’ அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள ”கூவம்” நதியை மறந்தது ஏனோ ?
மங்கை, அடிப்படைப் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். மதம் மாறியவன் கடனில் மாட்டியிருப்பான். அல்லது குடிகாரனாக இருப்பான்.அல்லது பெண்டாட்டி மேல் சந்தேகம் உள்ளவனாக இருப்பான். கையில் காசில்லாமல் தான் நினைத்த வாழ்வை வாழ முடியாதவனாக இருப்பான். இவர்களுக்கு இஸ்லாம் அடைக்கலம் கொடுக்கிறது. அவன் தொடர்ந்து முன்பு என்ன செய்தானோ அதைச் செய்து கொண்டு தான் இருப்பான். ஆனால் இப்போது அவன் புது மனிதன். சொர்க்கத்தில் அவனுக்கு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. மற்ற மதங்களால் இதை செய்ய முடியுமா!
வெளிநாடு தமிழர்களில் ..சொந்த லாபத்திற்காக இஸ்லாமிய மதம் மாறி ..பெயர் மாற்றும் கேவலம் இந்த மலேசியாவில் மாத்திரமே ..படித்தவர்கள் கூட இப்படி என்றால் ????? அது சரி மதம் மாறியதும் இவர்களை மலாய் சமுதாயம் ஏற்று கொண்டு விடுமா ????
தொழுகையின் போது இப்படிப்பட்டவர்களுக்கு எந்த இடம் ஒதுக்கப் படுகின்றது என்பதை அவன்களை கேட்டுப்பாருங்கள். மதிகெட்டதொடல்லாமல் மானமும் கெட்டுதான் வாழ்கிறார்கள். 121(1A)சரத்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது டி ஏ பி மட்டுமே எதிர்த்தது. ஒரே அமைச்சன் சாமிவேலு சரத்தை வாசித்து முடிப்பதற்குள் ” Saya Sokong ” சொல்லி கர்பாலிடம் ” Belum habis bacalah Bodoh” என்று நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டதாக ஞாபகம்.
மங்கை சிறப்பாக உளறியிருக்கிறார். தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்.”பக்தி வந்தால் புத்தி போய் விடும்” – பெரியார். இவன்
(ஜெயகணேஷ்) எதுக்கு இஸ்லாம் மதத்தில் சேர்ந்தான் ?
மதம் மாறிய பின், தன பிள்ளைகளையும் வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முற்படுவோரை தேய்ந்த செருப்பைக்கொண்டு விரட்டி விரட்டி அடியுங்கள்….
எதோ ஓரளவாவது மாற்றம் கிடைக்குமா என்று பார்ப்போம்.
அண்மையில் நடாளுமன்றத்தில் மத மாற்றத்தைப்பற்றி பேசியதை சற்று கவனத்தில் கொள்ளுங்கள் அன்பரே!!!!!
போதிவர்மரே கடன் பட்டவரெல்லாம் மதம் மாறினால் இந்த
உலகத்தில் யாரும் எந்த மதத்திலும் நிலைத்து இருக்க முடியாது . அதென்ன ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம் . கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் யார் துணையும் இன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக வில்லையா ? நீங்கள் பார்த்ததில்லையா ? ஆண்களுக்கு சபலம் அதிகம் அதனால் வரும் வினை தான் . நம் நாட்டு சிவில் சட்டம் கூட ஒருதலை பட்சமாகவே உள்ளது . வேறு மத பெண் மீது சபலப்படும் முன் ஆண்கள் நிறைய யோசிக்க வேண்டும் , நண்பரே மதம் மாறியவன் சொர்க்கத்தில் சந்தோஷ படுவான் . நிம்மதியாக இருப்பான் என்று யார் சொனது ? பிரேத ஆத்மாவை பற்றி கேள்வி பட்டதில்லையா நீங்கள் .? தற்கொலை செய்து கொண்டவர்களும் கொலை செய்யப்பட்டவர்களும் மதம் மாறிய பின் இறப்பவர்களுக்கும் பிண்டம் வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர்கள் ஆவியாக இந்த உலகில் சுற்றி கொன்றே இருப்பார்கள் . அவர்கள் ஆத்மா சாந்தி அடையாது . யாரிடம் தப்பித்தாலும் சித்ரா குப்தன் கணக்கில் தப்பிக்க முடியாது .
தமிழர் நந்தா அவர்கள் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் மறைந்து போனதின் மர்மம் என்னவோ? (கேள்வி: சிவன் ஆரியக் கடவுளா இல்லை அவரை பாடிய நால்வர் ஆரியர்களா?) மீண்டும் அந்த பகுதிக்கு வந்து பதில் சொல்லவும். ஒரு பெண்ணை குறை சொல்ல ஆளாய் பறக்கும் தாங்கள், என் கேள்விக்கு பதில் சொன்னால் நலம்.
தமிழர் நந்தா நீங்கள் சமயம் சமந்தமாக என்ன கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் தருவேன் . சாக்கடை பற்றி என்னிடம் கேட்டால் எனக்கு பதில் சொல்ல தெரியாது . நான் குவம் பக்கம் போனதில்லை ஆனால் ஒரு காலத்தில் இந்த குவம் கூட நல்ல தூய்மையான நீரை கொண்ட ஆறு என்று என் தமிழக நண்பர் சொல்லியதுண்டு . இன்று கேட்பார் அற்று கிடக்கிறது . எனக்கு அவ்வளவு தான் தெரியும் தோழரே .
மங்கை அவர்களே ! நீங்கள் கையை வைத்து ஜபம் படித்தால் குழாய் நீரும் புனிதமாகி விடுமா ? ஷாபாஸ் நிறுவனத்துக்கு உங்கள் சேவை அவசியமாசே ? குடிநீரை சுத்திகரிப்புதான் அதிக செலவாகும் என்று ஷாபாஸ் நிறுவனம் சொல்கிறது ,உங்கள் ஜெபத்தின் மூலம் இந்த நாட்டுக்கு உதவலாமே மங்கை அவர்களே ! அது என்ன பிரேத ஆத்மா ? செம்பருத்தி வாசகர்களை பயம்புறுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ! சித்திர குப்தன் உங்கள் நெருங்கிய உறவா ? இறை நம்பிக்கையோடு பகுத்தறிவையும் பயன்படுத்துங்கள் மங்கை அவர்களே !
கண்ணன் அவர்களே ! மங்கையிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நந்தாவிடம் கேட்டால் எப்படி நம்பரே ?
அசாமி, அந்த கருத்தை சொன்னவர் தமிழர் நந்தா தான். அவரிடம் தானே அதை கேட்க முடியும்.
தமிழர் நந்தா அவர்களே, போதுமையா உமது பேச்சு.. உங்கள் நக்கலுக்கும் ஒரு அளவு இருக்க வேண்டுமையா……
நாவன் அவர்களே ! என் கருத்தை ஏன் நக்கலாக எடுத்துக்கொண்டிர் ? கொஞ்சம் சுய மரியாதையுடன் ,பகுத்தறிவையும் பயன்படுத்தலாமே ! என் கருத்து சரி இல்லையென்றால் அதை முறியடியுங்கள் நாவன் அவர்களே ! ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இருக்கட்டும்மே !
சித்திரா குப்தனா?? ஐயோ.. ஐயோ.. புராணம் பேசும் காலம் இதுவல்ல மங்கை. அறிவியல் பேசுங்கள்.. சமயம் முதலில் ஒழுங்காக இருக்கிறதா? இஸ்லாமியர் , கிருஸ்துவர் அனைவரும் ஒரே போல வணங்குறார்கள். நம் இந்துக்கள் அவனவன் இஷ்டபடி வணங்குகிறோம். அதற்கும் ஒரு நொண்டி சாக்கு வைத்திருப்போம். மாற்றான் மல்லிகையும் மணக்கும்.
தமிழர் நந்தா உங்கள் எழுத்து உங்களுக்கு சமய அறிவு இல்லை என்பதையே காட்டுகிறது . உங்களை போன்றவைகளுக்கு தமிழ் படம் முலமாக தான் ஒவொன்றையும் புரியவைக்க வேண்டி இருக்கிறது .கருடபுராணம் என்றால் தெரியாது ,
பிரேத ஆத்மா என்றால் தெரியாது .
இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பூசாரிகளை கேளுங்க . பிரேத ஆத்மா என்றால் என்ன வென்று சொல்வார்கள் .
. இந்த நாட்டில் என்னை விட சமய தெளிவு உள்ளவர் அதிகம் . அதை தமிழர்களிடம் சொல்ல முடியாது . கேட்கும் பக்குவத்தில் நீங்கள் இல்லை . உள்ளதை சொன்னேன் , தமிழர்களுக்கு உபன்யாசம் செய்ய நான் நாத்திகன் அல்ல . இஸ்லாத்தில் ஒரு விசயம் உள்ளது என்றால் வாய் பொத்தி கேட்பிர்கள் . ஹிந்து மதத்தில் உள்ளதை சொன்னால் விதண்டா வாதம் செய்விர்கள் .
ஷபாஸ் நிறுவனதிற்கு என் உதவி தேவை இல்லை .
கடந்த 30 வருடங்களாக மலேசியாவில் பல இந்துகள் முஸ்லீம்கள் தான்.ஒரு வேலை தோட்டா புற 16 வயதுக்கு கீழ் இளைஞர்கள் இன்னும் சுத்தமாக இருக்கலாம்…
நீங்கள் என்ன மங்கையா அல்லது மாங்காயா. கருடபுராணமாம், பூசாரிகளாம். உயிரோட உள்ள ஆத்மாக்களே பிச்சை எடுத்துக்கிட்டு அலயிதுங்கோ, இதுல பிரேத ஆத்மாவாம், தாங்கவில்லை பா. ஒருவேளை நித்தியானந்தாவோட product ஆ இருக்குமோ.
தமிழர் நந்தா அவர்களே, ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்துக்கு நான் தயார்.. சொல்லுங்கே.. உங்கே கருத்து தான் என்ன.. ?
பகுத்தறிவை பயன்படுத்துங்கள் என நீங்கள் சொல்லுவதின் காரணம் என்ன? யார் இங்கு பகுத்தறிவை பயன்படுத்தவில்லை? நீங்கள் முதலில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்??
குளிக்கும் முன் தன் கையை தண்ணீரில் வைத்து ஜபம் செய்து குளிப்பதால் மங்கைக்கு positive enargy கிடைப்பதாக கூறுவதை நீங்கள் ஏன் கேலி செய்கிறீர்கள்? நீங்கள் அவ்வாறு செய்து உங்களுக்கு நடக்காமல் போயிருக்கா? சொல்லுங்கே தமிழர் நந்தா சொல்லுங்கே………..
எனக்கும் மங்கை அவர்களின் அந்த கருத்தில் நம்பிக்கை இல்லை,
இருந்தபோதும் அவரை அறியாமலே அவ்வாறு செய்வதால் தனக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி கிடைப்பதாக அவர் நம்புகிறார்.. எனவே நிச்சயம் அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கும், அது தான் மனதின் சக்தி..
உங்களுக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை.. syabas நிறுவனத்துக்கு உதவி புரிய விரும்பும் நீங்கள், வேறு ஏதாவது உருப்படியான கருத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்..
தமிழர் நந்தா அவர்களே….!!! நீங்கள் அடிக்கும் நக்கலை விடவா மற்றவர்கள் உங்கள் கருத்தை நக்கல் செய்கிறார்கள்?.ஏற்கெனவே பலமுறை உங்களுக்கும் ஆசாமி அண்ணாச்சி அவர்களுக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்…. மற்றவர் (மத)நம்பிக்கையை நையாண்டி செய்யாதீர்கள் என்று.என்னவோ உங்களுக்கும் அந்த அண்ணாச்சிக்கு மட்டுமே (பகுத்) அறிவு அதிகம் இருப்பது போலவும் மற்றவர்களுக்கு இல்லை என்பது போலவும் படம் காட்டுகிறீர்கள் ” உயர உயர பறந்தாலும் தட்டான் பூச்சி( ஊர்குருவி) பருந்தாகாது” நினைவில் கொள்க..:
ஆரியனிடம் உங்கள் சமயத்தையும் ,கொள்கையும் ,தன்னம்பிக்கையும் ,மனோபலத்தையும் அடகு வைத்த நீங்களா என்னிடம் பகுத்தறிவு பேசுகிறீர் ? மங்கை கடவுள் ஏஜெண்டாகவும்,நாவன் துணை ஏஜெண்டாகவும் ,ரிஷி (கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத பெயர் ) கடவுளுக்கு (secretary ) போல் நினைத்து திட்டுகிறார்கள் !
மங்கை அவர்களுக்கு ஒரு வினா.அது ஏன் தமிழர்களுக்கு விளங்காது,புரியாது?சொல்லும் விசயத்தை மற்றவர்கள் மனம் புண் படும் படி கூற வேண்டாம்.உங்கள் மனம் கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் எழுதுகிறீர்.உங்கள் விளக்கத்தை தெளிவுடன் கூற முற்படுங்கள்.தமிழர்கள் அனைவரையும் கோபப் பட வைக்காதீர்கள்.
சகோதர சகோதரிகளே, கட்டுரையின் சாராம்சம் குறித்து விவாதங்கள் கருத்துக் குவியல்கள் இருக்க வேண்டும். அவரவர் சொந்த மதவாதங்களையும், பிரதாபங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அள்ளித் தெளித்துக் கொள்வதில் என்ன பயன்? வெகு தூரம் செல்வானேன்? சரவாக் மாநிலத்திற்கு சென்று பாருங்கள். வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆயினும் ஒரே குடும்பமாக வாழும், தம்பதியர், உடன் பிறப்புக்கள் எத்தனையோ பேரை கண்டுள்ளேன். அங்கு எனது அலுவலகத்திலேயே பணிபுரிந்த சக ஊழியர்கள் இருவர் குடும்பமும் அவ்வாறுதான். அவர்களிடமே கேட்டேன் இது எப்படி சாத்தியம் என்று? மனம் மாறினால் போதும் மதம் மாறத் தேவை இல்லை என்றார்கள். இது போன்ற உதாரனங்கள் கொண்டு தீபகற்பத்தில் வாழும் நம் சகோதர சகோதரிகள் மதம் மாறாமலே ஒன்றித்து வாழ சட்ட ரீதியாக மாற்றம் கொண்டு வர முடியுமா என்று வழி வகைகளை ஆராயவேண்டும். அதைவிடுத்து அவன் இப்படி போனான், இவன் அப்படி போனான் என்று ஏக வாசனைகள் எதற்கு? நன்றி
மங்கை அவர்கள் சமயம் தொடர்பான கருத்துக்களைக் கூறுவது அவரின் உரிமை. அவர் சொன்னதுபோல உண்மையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் நம்மிடையே வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது. முனைவர் காதர் இப்ராஹிம் கூட இது பற்றிக் கூறியுள்ளார். சமய நெறிகளை நம் குழந்தைகளுக்கு சரியான முறையில் கூறி அவர்கள் அதற்கேற்ப ஒழுகுவாராயின் மதமாற்றம் நிகழ வாய்ப்பில்லை. மங்கை இனத்தையும் மொழியையும் இடித்துரைப்பது அழகல்ல.
முதலில் மாமா கடையில் சாப்பிடுவதை நிறுத்த முடியுமா நண்பா
பெரியசாமி அவர்களே, ‘அவர்கள்- (கி, மு) ஒருவேளை விட்டு கொடுப்பது போல் தெரியும், ஆனால் பிறகு பட்டா போட்டுக்கொள்வார்கள். நாம் நலிய வாய்ப்பிருக்கின்றது…
எல்லா மதமும் நல்லதையே
சொல்கிறது. மனிதர்களாகிய நாம்தான் செய்வதை எல்லாம் செய்து விட்டு, மதத்தின் மேல் பலியை போடுகிறோம். எவன் ஒருவன் தன் பிறந்த மதத்தில் இருந்து வேறு மதத்தில் மாருகிரனோ
அன்றே அவன் இறந்தவன் ஆகிறான். சுபம்
கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலைஸ்மின் சந்நிதிங் குரு
இதற்கு தமிழில் என்ன அர்த்தம் தோழி
jayasangar மலேசியாவை பொறுத்த வரை தமிழ் தான் இந்தியர்களின் தாய் மொழி . அகவே சமஸ்க்ருதைதை பற்றிய ஆராச்சி தேவை இல்லை . அதை விவர்க்க போக ,எங்கள் தமிழ் கல்தோன்றா காலத்திலே உள்ளது என்று சண்டைக்கு வந்து விடுவார்கள் . என்னை வம்பில் மாட்டி விட வேண்டாம் . நேத்ர அவர்களே ஹிந்துக்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நெறி முறைகள் உண்டு என்பதை கூறினேன் . அதை காதிர் இப்ராஹிம் போன்றவர்கள் சொலும்போது உங்கள் செவியில் விழுகிறது . நல்லது .
நேத்ரா சொன்னது உண்மைதான் மங்கை. காதிர் இப்ராஹிம் பல ஹிந்து சார்ந்த கருத்துக்களை மறைக்காமல் கூறியிருக்கின்றார். உங்கள் பிராமணர் போல வேண்டியதை மறைத்து மாட்டு மூத்திரத்தை மக்களுக்குக் குடிக்கக் கொடுக்கும் பழக்கம் இல்லாதவர். எங்கள் தமிழ் அரசர் யாரேனும் ஆரியரை எதிர்த்து நின்றால் உடனே அவர் அரக்கன். குரங்கு வாலி எங்கே, நேரில் நிற்க வலுவில்லாத ஆரிய ராமன் எங்கே. உன்னை மணக்க விரும்புகிறேன் என்று கூறிய சூர்ப்பனகை அரக்கி, அவள் மார்பையும் மூக்கையும் அறுத்து அவமானப் படுத்திய இலக்குவன் எனும் ஆரியன் தெய்வப் பிறவி. உன்னை அப்படி செய்தால் உன் அண்ணன் பொறுப்பானா? பழிக்குப் பழி சீதையை கடத்திய ராவணன் அரக்கன், குரங்குகளின் உதவியோடு பெண்டாட்டியை மீட்ட ஆரிய ராமன் மாவீரன். கதைகளை சொல்லியே இனத்தை முட்டாள் ஆக்கிய ஆரிய நாய்கள் குரைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னும் சமுதாயம் மண்டியிட வேண்டிவரும். ஆரியனைக் கருவருக்க வேண்டும். அப்போதுதான் இனம் உறுப்படும்.
சொப்பன சுந்தரி இதயத்தில் கனன்று எரியும் நெருப்பு வரிகளைப் படித்தேன். இன்னும் தமிழன் தன்மானம் இழக்கவில்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக வாழும் உங்களை வாழ்த்துகின்றேன்.
கனல் இல்லையென்றால் கதிரவனிலும் கரி பிடிக்கும் என்பதால் வாழ்வியலிலும் சொப்பன சுந்தரி கனலாக இருக்க வேண்டும். முளைத்த எண்ணங்களை முடிந்து வைக்காமல் சொல்லுங்கள்.