கி.சீலதாஸ். பகுதி 2. மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனுக்கு கடவுள் உதவி செய்ய நினைத்து கொஞ்சம் பணம் கிடைக்கும்படி செய்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்டவன் வீடு திரும்பும்போது வழிப்பறி கொள்ளையன் தட்டிக்கொண்டு போய்விடுகிறான்.
கடவுள் பரிதாபப்பட்டார். வழிப்பறி கொள்ளையர்கள் நிறைந்துவிட்ட உலகில் இப்படியும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டுமொரு முறை உதவுகிறார். பணத்தைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் வீடு திரும்புகிறான். இந்த முறை மோட்டார்கார் அவனை இடித்துத் தள்ளியதால் காயம் அடைகிறான். மருத்துவமணைக்குக் கொண்டு செல்லும்போது மருத்துவத் துறை ஊழியர்கள் காயம் பட்டவனுக்குத் தெரியாமல் அவனிடமிருந்தப் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள் – திருடிவிடுகிறார்கள்.
கடவுளுக்கு இது தெரிந்துவிடுகிறது. இது என்ன கொடுமை? நாம் இவனுக்கு எவ்வளவு உதவி செய்தாலும் இவனால் கிடைத்த உதவியைச் சரியாக உபயோகிக்கத் தெரியவில்லையே. கொடுத்தப் பணத்தை அவனால் பாதுகாக்க முடியவில்லையே. இப்படி எல்லாம் சிந்தித்த கடவுளுக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. ஒருவேளை, இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டுமென்பது அவன் தலையெழுத்தோ! என்று சந்தேகப்படுகிறார், ஒரு முடிவுக்கும் வருகிறார்.
இவனுக்கு நான் உதவி செய்வதால் மட்டும் இவன் முன்னுக்கு வரமாட்டான். சுலபமாக பணம் வரும் என்ற நம்பிக்கை கூடாது. அவனே ஒரு வழியைக் காணட்டும் என்று கைகழுவி விடுகிறார்.
இந்தத் துணுக்கை சொன்னபோது, இதில் பலப் பிரச்சினைகள் இருக்கின்றன என்றார் ஒருவர். அவர் ஒரு சமுதாயத் தொண்டர். அவரின் கருத்துப்படி சமுதாயத்தில் கொள்ளையர்களின் ஆதிக்கம் பெருகிவிட்டது. இதற்குக் காரணம் காவல்துறை. காவல்துறை சரியாகச் செயல்படவில்லை. குற்றத் தடுப்புச் சட்டம் இருந்து என்ன பயன்? அமலாக்கம் சரியாக இல்லையென்றால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. குற்றச் செயல்களால் விளைகின்ற கேடுகளைப் பற்றி கதைகதையாகச் சொல்லுவதால் எந்தப் பலனும் கிடைக்காது. கேடுகள் எப்படிப்பட்டவை, தண்டனை எப்படிப்பட்டது என்பதை உணர்த்த வேண்டும். அதுதான் கல்வி. கல்வி சரியாக இல்லை என்றால் அது கேடு விளைவிக்கும். மற்றொரு பிரச்சினையையும் கவனிக்கவேண்டும். எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வு- பொருளாதார சமயின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் குற்றச் செயல்கள் பரவலாக இருக்கும் என்பதும் அவர் கருத்து.
அது ஒரு புறம் இருக்க பிறர் பொருளை அபகரிக்காதே என்று நீதி நூல்கள் அறிவுறுத்திய போதிலும் அது நிரந்தரமாக மனதில் பதியாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை அறிய முற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். திருடனைப் பிடித்து நல்லா நாலு சாத்து சாத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்ற வன்முறை மனோபாவம் தலைதூக்கி ஆர்ப்பரிக்கும்போது, மனித நேய அணுகுமுறை மவுசு இழந்தே காணப்படுகிறதே. எனவே, காவல்துறையை மட்டும் குறைச் சொல்லி அவர்களைக் குற்றப்படுத்துவது நியாயம் அல்ல என்ற கருத்தும் சொல்லப்பட்டது.
அடுத்தவர் ஓர் அரசியல்வாதி. இவரின் கருத்துப்படி இது ஒரு சமூகப் பிரச்சினை. சமூகம்தான் இபடிப்பட்ட சூழ்நிலைகள் வளருவதற்குக் காரணியாக இருந்துவிட்டது எனவே, சமூகம் தன் சிந்தனையில் மாற்றம் காணவேண்டும். திருடுவதால் ஏற்படும் கேடுகளை உணர்த்தவேண்டும். திருடும் பண்பாடு சமூகத்துக்கு எதிரானச் செயல். சமூக விரோதச் செயல் என்பதை கற்பிக்கவேண்டும். இந்தப் படிப்பினையின் ஆரம்பம் பள்ளிக்கூடங்களில் காணப்படவேண்டும் என்கிறார்.
அங்கே இருந்த வழக்கறிஞர், சட்டத்தில் கோளாறு இருப்பதால் அது எல்லா சமூகங்களையும் பாதிக்கிறது என்பதால் சட்டத்தில் திருத்தம் வேண்டும்.
மனோநிலை மருத்துவர் இதை எல்லாம் கேட்டபிறகு “உங்கள் கருத்து ஒருவகையில் நியாயமாகவும், ஏற்புடையதாகவும் இருக்கலாம். ஆனால், உண்மையில் ஒருசிலர் பயங்கரமான காரியங்களில் ஈடுபட்டு பிறருக்குத் தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய மனநிலை.
ஒருவன் பெற்றோரிடமிருந்து பலாத்கார கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்கிறான். பள்ளிக்கூடத்துக்குப் போனதும் அங்கேயும் பலாத்கார கலாச்சாரம் வலுவாக இருப்பதைக் காண்கிறான். அவனுக்கு இன, சமய வேறுபாடு திணிக்கப்படுகிறது – நேரடியாக அல்ல மறைமுகமாக –அதுவே சமூகங்களின் அழிவுக்கு வித்திடுகிறது எனின் பிழையாகாது. இப்படிப்பட்ட சூழ்நிலை பல்லின மக்கள் வாழும் இடத்தில் வெறுப்புணர்வு, பிற இனங்கள் மீதான சந்தேகத்தை வளர உதவுகிறது. பலாத்காரத்தால் அவனால் எதையும் சாதிக்க முடியும் என்ற மமதை அவனைக் கொடுமையான செயல்களுக்கு உந்துகிறது” என்றார்.
இந்த மனோநிலை, எல்லாம் வளர்ப்பு முறையிலும் வளர்கின்ற சுற்றுப்புற சூழ்நிலையும் காரணம் என்பது அவரின் கருத்து.
இறுதியாக காவி உடை உடுத்திய ஒருவர். “இதெல்லாம் விதி அப்பா. கடவுள் பணத்தை இரண்டுமுறை கொடுத்தும் அந்த ஏழையால் பாதுகாக்க முடியவில்லை. அது அவன் தவறில்லை. கொள்ளை அடித்தவர்களின் தவறுமில்லை, காரணம் அவர்களின் தலையெழுத்து, கொள்ளை அடித்துப் பிழைக்க வேண்டுமென்பதாகும். மருத்துவப் பணியாளர்கள் திருடியதும் அவர்கள் இப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டுமென்ற விதி”.
காவி உடுத்தியவரின் கருத்தை செவிமெடுத்தவர்களில் சில பேர், அதை ஏற்றுக்கொள்ள சங்கடப்பட்டனர் என்பதை அவர்களின் முக சுளிப்பிலிருந்து காணமுடிந்தது. மற்றும் சிலர் அப்படியும் இருக்கலாம் என்று விதியின்மீது பழிபோட தயங்கவில்லை. இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கடவுள் “கடைசியாக….என்மீதே பழிபோட்டுவிட்டார்களே!” என்று கையைப் பிசைந்துகொண்டு அமர்ந்து “இந்த மனித சமுதாயத்தை எப்படித்தான் காப்பாற்றுவது?” என்று சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.
இதை ஏன் சொன்னேன் என்றால் , ஒரு துணுக்காக இருந்தாலும் அது பலவிதமான வேறுபட்ட வியாக்கியானங்களுக்கு உட்படுகிறது என்பதைக் காட்டவே. தமிழர்கள் பழமையை நினைத்து, பழையக் கருத்துக்களை சொல்லி தங்களைத் தாங்களே போற்றிக்கொள்வார்களே அன்றி அதன் கருபொருளை அறிய முனையமாட்டார்கள்.
படித்ததையெல்லாம் அப்படியே நம்புபவன் முட்டாள் என்பது ஜப்பான் முதுமொழி. அதில் எத்தகைய பொருள் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். படித்ததை முழுமையாக நம்புவது எளிது. மூலைக்கு வேலை இல்லை; ஆனால், படித்ததை சிந்தித்து ஆய்ந்து பார்க்கும்போது அது அறிவு வளர்ச்சிக்கும், உலக அனுபவம் பெறுவதற்கும் நல்ல மனிதனாக, மனித நேய மனிதனாக வளர, வாழ உரமாக அமைந்துவிடுகிறது.
ஐந்தறிவு குரங்கு ஆறறிவு தமிழனாக வாழ்ந்து பொற்காலத்தையும் அடைந்த பெருமை அவன் வாழ்ந்த வாழ்க்கை நெறிகளே என்றால் அது மிகையாகாது.திருவள்ளுவர் நம்மை மீண்டும் சீர்படுத்த நம் பிஞ்சுகளுக்கு இன்றே திருக்குறளை விதைத்தல் அவசியம்.வரும் காலத்தில் தமிழர் தலை எழுத்து மாற்றம் காண இதுவே சிறந்த வழி என்பது என் கருத்தும் கூட.
ஐயா இன்னும் 20 வருடம் அம்னோ ஆட்சி செய்தால் , பிலிப்பைன் நாட்டில் பொது மக்கள் அடித்துக்கொண்டார்களே (இமெல்டா மார்கஸ் காலத்தில்) அதே நிலைதான் இங்கு ஏற்படும் , நாட்டை சூரையாடுவர்களை விட்டு விட்டீர்களே ஐயா ! கடவுளுக்கும் கண் இல்லை உங்களுக்கும்மா ?
உங்களின் இவ்வளவு பெரிய கட்டுரையை, தமிழில் ஒரு வரியில், கண்னால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். என்று மிக அழகாக சொல்லி விட்டார்கள். நாங்கள் ஆணவ உணர்வின் பிரதிநிதிகள் அல்லவா! உலகமே ஒரு நிலையில்லாமல் சுற்றிக்கொண்டும், சுழன்றுக்கொண்டும் இருக்கும் போழுது, நாங்கள் ஏன் ஆறாவது அறிவான சிந்தனையை உபயோகித்து ஒரு நிழையில் நிற்க வேண்டும். தமிழ் மரபணுவில் வந்த நாங்கள், எங்கள் முன்னோர்கள் கையான்ட அந்த திறமைகள், பண்புகள், பழக்க வழக்கங்கள் எங்களிடமும் உண்டென்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். தமிழில் பேசினாலும் தமிழின் வார்த்தைகளின், அர்த்தங்களின், தன்மைகளை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். மனமும், மனதின் தன்மையும் ஓர் வரியில் எடுத்துக்கூறிய பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதை நாங்கள் ஏன் எற்க வேண்டும். சேமிக்கும் பலனையும், ஊதாரி தனத்தையும் ஒரு வரியில் எடுத்துக்கூறிய கந்தையானாலும் கசக்கி கட்டு என்பது எங்களுக்கு தேவை இல்லை. மனம் என்று ஒன்று இருப்பதையே அறியாத நாங்கள், விதி என்று சொல்லி காலத்தை ஓட்டுவோம். உடலில் ஏற்படும் காயத்திற்கு, உலகெங்கும் மருந்துகள் கிடைக்கும். ஆனால் உடலினுள் உள்ளத்தில் ஏற்படும் காயத்திற்கு இந்தியாவில் கண்ட மருந்து மட்டுமே பயன் படும் என்பதை நாங்கள் ஏற்க வேண்டுமா. மொத்தத்தில் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிசமான திருக்குறளையே அனாதையாக்கிக் கொண்டிருக்கிறோம். 26 எழுத்து செய்யாத அதிசயத்தை 247 எழுத்து செய்து விடுமா என்ன, அதோ தெரிகிறார் உடல் பெருத்து போன எங்கள் குருஜி. 7வது அறிவின் அறைக்கதவு சாவியை வைத்துக்கொண்டு எங்களை அழைக்கிறார். குறுக்கு வழி இருக்கும் போழுது எதற்கு 6வது அறிவு சிந்தனை. ரத்தம் சுன்டி போன பெருசுகளுக்கு வேண்டும் என்றால் 6வது அறிவு பயன் படட்டும். எங்களுக்கு தேவை இல்லை. எங்களுடன் மந்தையில் ஒருவராக சேர்ந்து கொள்ளுங்கள். முதல் வரிசையில் இடம் கிடைக்கும். இல்லையென்றால் காட்டாறு வெள்ளத்தில் மூழ்கிப் போன குடிசையும் குடியானவனும் கதைதான் உங்களுக்கு. அதோ கையை காட்டி அழைக்கிறார் எங்கள் குருஜி. வரட்டுமா.
தோழா,ஆண்டவனை மணதில் வைத்து போற்றவேணும்,காலில் போட்டு மிதிக்ககூடாது ஆணடவன் மீது உங்கள் கருத்து? ஆத்மா,மகாத்மா,பரமாத்மா இதில் ஆண்டவன் எங்கே, .மாதா,பிதா,குரு,தெய்வம்.பெற்றோா்களை குரைசொல்பவன் மனிதனே இல்லை.பள்ளிக்கு ஏன் பிள்ளைகளை அனுப்புகிரோம் கல்வி கற்க,அங்கே பிள்ளைகளுக்கு தேவையானதை போதிக்க படுவதில்லை,ஆசிரியரின் குரையை மரைக்க பிரம்பு ஒரு ஆயுதம்.இந்த பிரம்பு தான் எதிா்காலத்தில் பாராங் ஏந்த காரணம்.(எத்தனை ஆசிாியா்களுக்கு அய் கியூ டெஸ்ட் செய்ய தெரியும்).பெற்றோா் பள்ளிக்கு பிள்ளையை அனுப்பாவிடில் குற்றம்.பெற்றோா்கள் அவரின் கடமையை செய்கின்றனா்,உழைப்பு.உதாரணம் சொல்ல ஆண்டவனா கிடைத்தாா்.நீங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை,குண்டா்களின் பேக்ரௌன் பாருங்க,படிப்பு எழுதபடிக்க தெரியாது,குடும்பம் சூழ் நிலை,வாழ்கை தரம்,வருமை,சமுதாயம்.என்னுடய தாழ்மையான கருத்து,பள்ளிக்கூடம் அங்கே இந்து யாா்,வேத,ஆகமங்கள்,புராணம்,இதிகாசம்,மதம் சம்மந்தமானவை போதிக்கபட வேண்டும்.பின் எதற்கு மத பள்ளி.நம் இனம் சீரழிவுக்கு முதல் காரணம் மதத்தை பற்றி புரியாமை,(திராவிடம்,வரம்பு மீாிய சுதந்திரம்,மத கொள்கைக்கு புரம்பாக நடப்பது,பெரியோரை இகழ்வது,அடக்கமற்ற போக்கு).ஆடதெரியாதவனுக்கு மேடை கோணல் போல். இங்கு மட்டுமின்றி உலகெங்கும் தமிழ் இனத்தை மற்றமதங்கள் மதிப்பதில்லை.நாராயண சமா்பணம்.
உழவரே, அருமையான விமர்சனம். சொந்த புத்தி உள்ளவர்களும் சொல் புத்தியையாவது கேட்டு நல் வழி நடப்பவரும் உருப்படுவார். இவ்விரண்டும் இல்லாதவரை என்னவென்று சொல்வது? கட்டுரையாளர் கூறுவது போல் அவரவருக்கு பரீட்சியமான கோணத்தில் பார்க்கும் போது வெவ்வேறு கருத்துக்கள் எழத்தான் செய்யும். இதில் பிரச்சனையைக் களை எடுக்க எது சிறந்த வழி என்பது நம்முடைய நோக்கம், இலக்கு, நாம் எதிர்நோக்கும் பிரச்சனை, யாரை நோக்கி நாம் களம் இறங்குகின்றோம் என்று ஆராய்ந்து அடி எடுத்து வைக்க வேண்டும். பொது நலக் காரியம் என்றால் பண பலம், படை பலம் தேவைப் படும். நமக்கு அறிவு வந்து விட்டது. செயலாக்கம்தான் குறைவாக இருக்கிறது. தற்சமயம் செயலாக்கத்திற்கு வழி கோலுவோம்.
நண்பர் சீலதாஸ் ஒரு வழக்குரைஞர். நல்ல ஒரு படைப்பாளி. ஆனால், இப்படி எல்லாம் எழுதிச் சிந்திக்க வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றாக எழுதுகிறீர்கள் சீலதாஸ். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். கோலாலம்பூருக்கு வந்தால் உங்களைச் சந்திக்கின்றேன். ஜீவி காத்தையா, பசுபதி, ஆறுமுகம் மறக்க முடியாத மனிதர்கள். நன்றி.
ஐயோ! யாரைக் குற்றம் சொல்றது? தலைமுடிய பிச்சி பிச்சி முடி கூட இல்லை! குற்றம் சொல்லலேன்னா எங்களால தூங்க முடியாது! இப்படியா அலைய உடறது!
மூன்றாம் வகுப்பில் என் தமிழ் ஆசிரியர் சொன்ன கதை ..
வருத்தப்படும் இளஞர் அமைப்பு.
***இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கடவுள் “கடைசியாக….என்மீதே பழிபோட்டுவிட்டார்களே!” என்று கையைப் பிசைந்துகொண்டு அமர்ந்து “இந்த மனித சமுதாயத்தை எப்படித்தான் காப்பாற்றுவது?” என்று சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.***
கட்டுரையாளரே பல கருத்து…விளக்கங்களை பேசி இறுதியில் மேற்
குறிப்பிட்ட செய்தியோடு முடித்திருக்கிறீர்கள் ,
இன்றைய நவீன மாற்றங்களோடு …கண் மூடி கண் திறக்க மாற்றம்
மாற்றம் என்ற அளவில் உலகம் என்னென்னவோ சாதனைகளோடு
ஒருபுறம் மனுக்குல மேம்பாடு …மனுக்குல உதவிகள் …இன்னும் எவ்வளவோ பல பல நலத்திட்டங்கள் என மனுகுல நிம்மதியான வாழ்வுக்கு வழி தேடும் மனித கூட்டம் ஒரு புறம் …,
இன்னொரு பக்கம் இன்று …யுக்கிரென்…மதிய கிழக்கு நாடுகள் …,
ஆப்ரிக்க நாடுகள் போன்றவற்றில் நிகழும் உரிமைப்போராட்டங்கள் ..
போன்ற மனித உயிர் இழப்புக்கள் …,
இவற்றுக்கு அடிப்படை காரணம் …மனிதர்கள் …!!!பேராசை பிடித்த …இன வெறி கொண்ட …அரசியல் வாத திமிர் …ஆணவம் கொண்ட
மனிதர்கள் !!!
ஆட்சியை கை நழுவ விட்டால் வாழ்வே போனதாகும் என வெறி கொண்ட ஈனப்பிறவிகள் …,சில அவர்களைப்போன்ற ஈனப் பிறவிகளை உடன் வைத்துக்கொண்டு நடத்தும் அசிங்கமான ஆட்சி !
ஊழல் …எங்கும் எதிலும் ஊழல் …மனித இன பாகுபாடு …எவ்வளவு
காலம் …எத்தனை…ஆண்டுகள் ???,
யாரை யார் அடக்குவது …அடிமைப்படுத்துவது ??? ***
அடக்குமுறை வெடிக்கும் காலம்
***.மனிதனுக்கும் *** EXPIRAYDATE***
..உண்டு …என்பதை உணரா கேவலமான சில அரசியல் வாதிகள்
இவர்களை கண் எதிரே விட்டு ஆண்டவன் …பற்றி பேசி பயன் என்ன ?
சமீபத்தில் ஆஸ்த்ரேலியா கண்டம் சென்றிருந்தேன் …அங்கும் இங்கும் சில அசம்பாவிதங்கள் பற்றி பேசினாலும் …அரசு …அதன்
அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம் நேர்மை ,ஊழல் இல்லை …
பி .ஆர் .பெற்றவர்களோ …குடியுரிமை உடையவர்களோ …அனைவரையும் மக்களாக நடத்தும் விதம் …வேலை இல்லாதவனையும் உயிர் வாழ நிதி கொடுத்து உதவும் அரசின் சட்ட திட்டங்கள் …,அங்கே திருடன் …திருடு இல்லை !
வேலியில்லா கண்ணாடி கதவுகள் …குற்றம் செய்பவன் …திருட்டுப்
பொருளை அவன் பணமாக்க முடியாது ,பிடிபடுவான் !
அவனவன் ஏதாவது தொழில் செய்து வாழ வழியுண்டு .
கள்ளக் குடியேறி இல்லை .
செய்யும் தொழிலுக்கு ஏற்ற ஊதியம் உண்டு .
இன்னும் எவ்வளவோ உண்மைகள் உண்டு .
சொந்த நாட்டானையே மாற்றானாக நடத்தும் நிலையில்லை
நீங்கள் வழக்கறிஞ்சர் என்பதால் இவை யாவும் உங்களுக்கும் தெரியும் .
17 ஆண்டுகளாக நிதி பெற்றவர் அது நிறுத்தப்பட்டதால் விடிவு காண
அங்கும் இங்கும் அலையும் நிலை …வெறுப்பு வருகிறதையா.
எல்லா மக்களையும் ஒரே நிலையில் பார்க்கும் நிலை வராதவரை
நடப்பது எல்லாம் போலி… பேசுவது எல்லாம் பொய் …எப்போதாவது
கொடுக்கும் சில்லறைகள் மக்களின் வறுமையை ஓட்டுமா?
பிறந்த குழந்தைக்கும் நிதி மாதாமாதம் கொடுத்து அவர்களையும்
நாட்டின் சொத்தாக மதிக்கும் நாடுகள் இருக்கும் போது…சொந்த
பிரஜைகளை வெண்ணையும் சுண்ணாம்புமாக பாகுபடுத்தி …ஒருவனுக்கு வயிறு புடைக்க உணவும் …இன்னொருவனுக்கு
ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாமல் நாட்டை நடத்தினால்
நாட்டில் நிம்மதி நிலைக்குமா ?
கள்ளக்குடியேறி களும் அந்நிய நாட்டானும் தொழில் தொட்டு …
அங்காடி வியாபாரம் வரை நடத்த இடம் கொடுத்து சொந்த நாட்டானை கைவிட்டால் நாட்டில் நிம்மதி நிலைக்குமா ?
இவற்றுக்கு வழி காண முடியா அரசியல் கூட்டணி கூட்டணியா ?
இவற்றுக்கு வழி தெரிய ஏதாவது நடக்கும் வரை …
கனவு தான் நம் இன மேம்பாடு ,படித்தவன் …படியேறி தோற்றவன்
வெளியேறுவது நிற்காது .
சார் உங்கள் அனுபவத்தில் விதி மதி சதி பற்றிய விமர்சனம் எழுதலாம்…இந்த வியாககனங்களே?? கதை என் மூளைக்கு
ஒட்டல சார் tolong இன்னும் மூன்றாம் பகுதியா?