பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அம்மாநில அரசுமுடிவெடுத்து அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரியிருந்தது. அப்பள்ளி அமைப்பதற்காக நிலமும் அடையாளம் காணப்பட்டது. கல்வி மத்திய அரசின் அதிகார்த்திற்கு உட்பட்டதால், பினாங்கில் ஓர் இடைநிலை தமிழ்ப்பள்ளி அமைக்க அனுமதி கோரி மார்ச் 20, 2013 இல் பினாங்கு மாநில அரசு கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
பினாங்கு மாநில அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனை அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் தெரியப்படுத்தியுள்ளார்.
ஆனால், பினாங்கில் ஓர் இடைநிலைப்பள்ளி அமைக்க அந்த மாநில அரசிடமிருந்து கல்வி அமைச்சுக்கு எவ்வித விண்ணப்பமும் கிட்டவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் கூறியுள்ளது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குவான் எங் கூறியுள்ளார். (தநே 20.2.2014)
கமலநாதனின் கூற்று இப்படி இருக்கையில், மாநில அரசின் விண்ணப்பம் கல்வி அமைச்சால் நிராகரிக்கப்பட்டிருப்பதை விவரிக்கும் கடிதத்தை குவான் எங் வெளியிட்டார். அக்கடிதத்தில் 1996 ஆம் ஆண்டின் கல்வி சட்டம் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் நிர்மாணிப்புக்கு மட்டுமே வகை செய்கிறது. மற்ற இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் கைர் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார் என்று குவான் எங் சுட்டிக் காட்டினார்.
தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதால் என்ன பாதகம் ஏற்படும் என்று அக்கடிததில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆகவே, இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குவான் எங் மேலும் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் முகைதின் யாசின் நேரடியாக தலையிட்டு இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றாரவர்.
கல்வி அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார். தாய்மொழிப்பள்ளிகளுக்கு முடிவு கட்டும் மலேசியா கல்வி பெருந்திட்டம் 2013-2025 ஐ வரைந்து வெளியிட்டு அதனை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முகைதின் இதில் தலையிட மாட்டார். அவர் “ஒரே மொழி, ஒரே பள்ளி” என்ற அம்னோவின் கொள்கை பாதுகாவலர்.
1958 ஆம் ஆண்டில், மஇகாவின் 12 ஆவது பொதுக்கூட்டத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு உடனடியாக மலாய் பள்ளி ஆசிரியர்கள் மன்றங்களின் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கல்வி விவகாரத்தில் மசீசவும் கடுமையான போக்கை கடைபிடித்ததால், சீன-இந்திய ஒத்துழைப்புக்கான சூழ்நிலை உருவாகியுள்ளதை தெரிந்து கொண்ட “சுதந்திர தந்தை” துங்கு அப்துல் ரஹ்மான் மசீச “இந்தியர்களின் உதவியை நாடவே கூடாது” (“MCA should never ‘seek the help of the Indians’”) என்று மசீச தலைவர் டான் செங் லோக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். மசீச அடங்கிக் கொண்டது. பின்னர், இதன் அடிப்படையிலேயே, அம்னோவினரை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் மஇகா கிளைகள் மேற்கொண்ட முயற்சிகளை அதன் அன்றைய தலைவர் வி.தி. சம்பந்தன் தட்டிக்கழித்து விட்டார்.
இடைப்பட்ட காலத்தில், அம்னோவினரும் கல்வி அமைச்சும் “ஒரே மொழி, ஒரே பள்ளி” என்ற திட்டத்தில் தீவிரமாக இருந்து வ்ருகின்றனர். அதன் விளைவுதான் பினாங்கு மாநில அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த கமலனாதனுகு அரை வாங்கத்தான் தெரியும். முழு பூசணிக்காய்யை அப்படியே மூடி மறைதிடுவான். பச்சோந்தி
ம.இ.கா. எந்த நெருக்கதல்களையும் கொடுக்காது என்பது ஊர் அறிந்த விஷயம். அடிவாங்கியாவது தங்களது பதவியைத் தற்காத்துக் கொள்ளுவார்களே தவிர அதற்கு மேல் ஓர் அடியும் எடுத்து வைக்க மாட்டார்கள்! ஆனால் இப்படித்தான் நடக்கும் என்று ஊரறிந்த விஷயம் ஆயிற்றே! பினாங்கு அரசுக்குத் தெரியாதா!
தமிழ் தொடக்க பள்ளிகளே மாணவர்கள் இல்லாமல் தத்தளிக்கிறது ….இதுலே தமிழ் இடைநிலை பள்ளி…..சாத்தியமாகுமா ???…எதற்கு உந்த அகல கால்…?
ம இ கா தலைவர்கள் என்ன சொல்லபோகிறார்கள்?
இன்று வரை நாட்டு வருமானத்தில் இருந்து கோடி கோடியை கொள்ளை அடிக்கும் காக்கா பொறம்போக்கு குட்டி செத்தல்தான் இந்நாட்டு தமிழர்களுக்கு விடிவுக்காலம்! அவன் ஆடுறே நாடகம் இது! நமக்கு சம உரிமை என்ற சுதந்திரம் என்ன ஆச்சு?
எல்லா சலுகைகளையும் கோட்டை விட்ட ம.இ.கா இடைநிலை தமிழ் பள்ளி விவகாரத்தில் 1958 ஆண்டே கோட்டை விட்டது அதிர்ச்சியை தருகிறது ,துன் வி தி சம்பந்தன் ஒரு சந்தர்ப்ப வாதியாக வே இருந்துள்ளார் ,என்ன
செய்வது நைனா ,துன் சம்பந்தரும் ம.இ.கா காரர் ஆயிற்றே .
இந்த மனெங்க்கெட்ட பொலுபுக்கு புடிங்கிகிட்டு சாகலாம் கமலநாதன் ஐய அவர்களே ……
நாங்க என்ன காசு பணமா நடுவண் அரசிடம் இருந்து கேட்கின்றோம்? தமிழ் இடைநிலைப் பள்ளி என்றால் என்ன? எல்லாம் தமிழிலா போதிக்க போகின்றோம். இல்லையே. தமிழ் மொழிப் பாடம் இடைநிலைப் பள்ளியில் தொடர்ந்து படிக்கவும் அம்மொழியில் மாணவர்களின் புலமையை வளப்படுத்தவும் தானே கேட்கின்றோம். இதில் யாருக்கு என்ன பொச்சரிப்பு. ம.இ.க. தலைவர் கண் இருந்தும் குருடன் காரணம் அவருக்குத் தமிழ் எழுத படிக்க வராது. மற்ற சண்டாளக் கட்சித் தலைவர்ககெல்லாம் தமிழுக்கு என்ன எதிரியா?. இல்லை அம்னோகாரனுடன் சேர்ந்து தமிழை மெல்ல மெல்ல சாகடிக்கத் திட்டமா? தாய்த் தமிழை சாகடிக்க நினைக்கும் எவனும் தமிழ்த் தாய்க்கு மகனாக இருக்க மாட்டன், சண்டாளனாகவே இருப்பான்.
செய்தி சரிதான். ஆனால் படம் தான் சரியில்லை. இதைப் பார்க்கும்போது ஏதோ லிம் குவான் எங் தான் , ‘பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அனுமதி இல்லை’ என்று சொல்லி விட்டாரோ எனும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இவரின் படத்தை எடுத்து விட்டு, முகைதின் படம் அல்லது பழனியின் படம் போடுங்கள், பொருத்தமாக இருக்கும்.
இக்காலகட்டத்தில் எனக்கு எதுவுமே ஆச்சரியமில்லை. அம்னோ இனவாதிகளுக்கு MIC பின்புறம் கழுவும் வரை இது வும் இதற்க்கு மேலும் நடக்கும்
துன் வி. தி . சம்பந்தன் ஒரு தோல்வி தலைவரே. அவர் சாகா வரம் பெற்றவர் போல அன்றைய துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் பேச்சை மட்டும் நம்பிவிட்டார். அன்று நம் நாட்டிற்கு சுதந்திரம் அளித்தபோது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களுக்கும் அவர்தம் சந்ததியர்க்கும் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் கணிப்பில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் என்பதுதான். இப்பொழுதும் அந்நாட்டில் இப்படிதானே இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் மட்டும் நிலைமை வேறுபட்டு உள்ளது. இந்த வேறுபட்ட நிலைமை உருவேடுக்குமுன்பே முளையிலேயே கிள்ளியிருக்கவேண்டும். அன்றைய தலைவர்களின் ஏனோதானோ போக்கு இன்று நாம் அனுபவிக்கும் அவல நிலை. அவரைப்பற்றிய இன்னும் ஒரு சுவாரஸ்யமான செய்தி. நமது சுதந்திரத்திற்கு பின் பிஜி தீவுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அங்கு பிஜி பூர்வகுடிகளை விட இந்தியர்களே அதிகமாக இருந்தனர். ஆக தேர்தல் முறைப்படி இந்திய வம்சாவளியினரே வெற்றியடைந்து நாட்டை நிர்வகித்து வந்தனர். சுதந்திர நாட்டுக்கு தனி அரசியல் சாசனம் தேவை. ஆக அதனை தயாரிக்க நமது நாட்டின் சார்பாக நமது தலைவர் சம்பந்தன் அவர்கள் பொறுப்பேற்றார். விளைவு இங்கு கோட்டைவிட்ட மாதிரி அங்கேயும் இந்திய வம்சாவளியினருக்கு மக்கு வைத்துவிட்டார். அவர் அமைத்த அந்நாட்டு சாசனத்தில் அந்நாட்டு பூர்வகுடிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்திருந்தாலும் சலுகைகளை நிறைய பெற்றிருந்தார்கள். ஆரம்பத்தில் அதனில் எவரும் அக்கறை கொள்ளவில்லை. சத்வேனி ராபுக்கா என்றொரு அந்நாட்டு பூர்வகுடிமகன் தனது அறிவாற்றலால் தனது மக்களுக்கு அரசியல் சாசனத்தில் அபரிமித சலுகைகள் இருப்பதை கண்டு, அதனின் துணையோடு அங்கு தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான இந்திய வமசவளியினரை பதவி துறக்க செய்தார். சமபந்தனாரின் அறிய செயல். இவ்விஷயத்தை அந்த பிரச்சினை எழுந்தபோது நாளிதழ்களில் தெளிவாகவே எழுதியிருந்தனர். பாருங்கள் நம்முடைய தூர நோக்கு எப்படியானதென்று? எது எப்படியிருந்தாலும் நாம் பழையதையே பேசி சும்மா இருக்க கூடாது. அதற்காக மற்றவரின் சலுகைகளை நாம் தட்டி பறிக்கவும் வேண்டாம். நமது உரிமையை கேட்க வேண்டும். நமது உரிமையை யார் கேட்டாலும், அவர்களோடு ஒன்றுபட்டு செயல்படுவோம். அதைவிடுத்து உடனே சம்பந்தப்பட்ட அமைச்சரையோ அரசையோ தற்காத்து பேசாமல் இருக்கவாவது நமது தலைவர்கள் ( என்று தங்களை தாங்களே தம்பட்டம் அடித்துகொள்பவர்கள்) கற்றுக்கொள்ளவேண்டும். ஒற்றுமையுடன் செயல்படுவோம் வெற்றி காண்போம். இறைவனும் நம்மையும் நம்மை சூழ்ந்துள்ளோர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Pon Rangan wrote on 20 February, 2014, 21:42
Dear YAB, Lim Guan Eng Penang Chief Minister Sir,
While thanking for the statement. There must be alternative measure to beat the
Federal act. You are a Champion on your style of Administration.
Why so difficult just allocate the land for Tamil Secondary School. We have cash
cow like National Land Finance cooperative society Pte Ltd (NLFCSPL) under our distinguished YBhg Tan Seri Soma and Dato Y Bhg Sahadevan and its @ 2 Tamil Literature Foundations under their banner to secure such useful land schemes for
the Tamil community.
We were too proud when the land for the 1st Tamil secondary school was
initiated in Penang some time ago. Even YAB P. Ramasamy the Deputy CM
declared the announcement at First Wolrd Tamilar Protection Conference in
2009 in Coimbutur,Tamil Nadu. Thereafter there was many announcements
pertaining to the Tamil Secondary school in the country and the entire Tamil
populous in the country is waiting your brave move.
We knew Federal will stand as an obstacle block to it.
இதுக்கு போயி இப்படி அலட்டிக்கலாமா முதல்வரே ! சமாளியுங்கள் உங்களால் மட்டுமே முடியும்.
நிலத்த எங்கள் தேசிய நில நிதி கூட்டுறவுக்கு தாங்க எங்கள் கூட்டுறவு தனியார் தமிழ் இடை நிலைப்ப்பள்ளியை கட்டிக்கொள்வோம். இதர தனியார் பள்ளிகளை போல பாடங்களையும் தமிழ் மொழி மேம்பாட்டையும் நாங்கள் எங்கள் NLFC கூட்டுறவு சங்கம் வழி நிலை நிறுத்த முடியும்.
அடுத்த தேர்தலுக்குள் தமிழர்கள் மறந்து விடுவார்கள்.
இனி பினாங்கு மாநிலம் பி.என். கைக்கு போக வாய்ப்பே இல்லை..! அப்படி இருக்க மத்திய அரசை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. சீன இடைநிலைப் பள்ளிக்கு என்ன அடிப்படை சட்டம் சொல்கிறதோ அதே சட்ட விதிப்படி தமிழ்ப் பள்ளியை நடத்துவதற்கு மாநில அரசு முயற்ச்சி செய்யலாமே..?
ஆரம்ப பள்ளிக்கே ஆசிரியா் மாணவா் பற்றாக்குறை ,சரியான விளக்கம் கொடுக்க கடமை பட்டவா்கள் யாா்,தமிழ் மொழி குறையில்லை/குறை என்பது விவாதம் இல்லை,ஆனால் பள்ளியில் என்ன போதிக்க படுகிறது,எட்லீஸ் தமிழாின் இலக்கனம்(ச்சீாி-2)வாழ்கை நெறி முறை,எட்லீஸ் இந்துக்களை பற்றி தெரிந்துகொள்ளவாவது பிள்ளையை தமிழ் பள்ளிக்கு அனுப்புவார்கள்.இதை காரணம் காட்டி திராவிடத்தை உளளே நுழைகாதீர்.(அதில் பெறியோறை அவமதித்தல்,பின்பற்றல்,சுதந்திரத்தை தவறாய் பயன்படுத்தல்,அத்துமீறல்)போன்ற செயல் பரவலாக நிகழ்கிறது.தமிழ்ப்பள்ளி என்றால் திருக்குறல்,திருக்குறல் என்றால் தமிழ்பள்ளி,என்ற தோற்றத்தையாவது ஆசிரியா் சமுகம் மாணவர்களுக்கு ஏற்படுத்தவேணும்.தமிழ் பள்ளியில் திருகுறலை போதிக்கவும் சீனர் மொழி எதற்கு,சிலம்பத்தை பயிற்சி கொடுங்கள் கராத்தே எதற்கு.எல்லாம் நாராயண சமா்பணம்.
பினாங்கு துணை முதல்வர் மாண்புமிகு இராமசாமி அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகம் செய்துள்ளார், செய்து வருகிறார். நன்றி. ஆனால், அவரும் அரசியல்வாதி என்பதை நிரூபிக்கப் பார்க்கிறார். இந்த தமிழ் இடைநிலைப்பள்ளி துணை முதல்வருக்கு ஒரு சாக்கா போச்சு, அரசியல் நடத்த. எதுக்கு இப்ப இடைநிலைத் தமிழ்ப்பள்ளி. என்னைக் கேட்டால் துணை முதல்வர் இந்த பாட்டை பாடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்ப்பள்ளிகளுக்கு கொடுத்து வரும் ஆதரவை இன்னும் அதிகரிக்க பாருங்கள். நிலம் இல்லாத தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலத்தை ஒதுக்குங்கள். மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாநிலத்திலேயே மிகப்பெரிய பள்ளி. அருகில் ஒரு துண்டு நிலம் இருந்தது. அதை அப்பள்ளி கேட்டது. அதை பெற்றுத் தரமுடியவில்லையே. இந்த நாட்டு இந்தியர்கள் அனைவரும் தமிழர்களல்ல. எனவே, தமிழ்ப்பள்ளிக்கே 56% என்றால் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு எத்தனை மாணவர்கள் வருவார்கள்? நான் பி.என் காரணல்ல. தமிழ் இடைநிலைப்பள்ளியில் எனக்கு உடன்பாடில்லை. மலாய், சீனர், இந்தியர்களிடையே மேலும் பிரிவினை ஏற்படுத்தாத வழியைப் பாருங்கள்.